குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வரம்: குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.

டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு , குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வடிவமைத்து சோதித்து வருகிறது.

இதனையடுத்து தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணையை ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

அப்போது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

இதன் வீடியோவை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது ‛‛எக்ஸ்” வலைதளத்தில் வெளியிட்டு டி.ஆர்.டி.ஓ.வுக்கு பாராட்டு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here