மஹாராஜா டெக்ஸ்டைஸின் 5ஆவது கிளை – டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்

காலத்திற்கேற்ப ஆடைகள் அணியும் விதம் மாறி வருகிறது. அந்த வகையில் இன்றைய நவீன காலத்திற்கேற்ப அனைவரும் விரும்பும் வகையில் மஹாராஜா டெக்ஸ்டைல்ஸ் பல  ஆண்டுகளாக பீடு நடைப்போட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் ஆதரவினைன் தொடர்ந்து பிரிக்பீல்ட்ஸ் வட்டார்த்தில் தனது 5ஆவது கிளை திறப்பு விழா கண்டது. மஹாராஜா டெக்ஸ்டைல்ஸை  மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். நம்மவர்கள் வர்த்தகத்தில் உயர வேண்டும்.  வர்த்தக்கத்தில் நாம் உயர்ந்தால் நமது பொருளாதாரம் தானாகவே உயரும் என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஹாராஜா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்  ராஜா கூறுகையில்  வாடிக்கையாளர்களின் வற்றாத ஆதரவினால் தற்பொழுது 5ஆவது கிளை திறக்கப்பட்டிருக்கிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான  புத்தம் புதிய ஆடைகள் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறது.  நாம் மிக விமர்சையாக கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. வாடிக்கையாளர்  அனைவரும் மஹாராஜா டெக்ஸ்டைஸிக்கு வருகை தந்து  குறைவான விலையில் தரமான ஆடைகளை வாங்கி செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

பிரிக்பீல்ட்ஸ் கிளையில் அதிரடி விலை குறைப்பில் ஆடைகள் விற்கப்படுகின்றன. குறிப்பாக பெண்களுக்கான  டாப்ஸ் குறைந்த விலையில் அதாவது 7 டாப்ஸ்கள் 100 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகின்றன. இந்த சலுகை கையிருப்பு இருக்கும் வரை என்றும் அவர் தெரிவித்தார். ஆடைகள் மட்டுமல்லாமல் வீட்டு உபயோகப் பொருட்களும் விற்கப்படுகின்றன.  தீபாவளியை முன்னிட்டு புத்தம் புதிய டிசைன்களில் ஆடைகள் தருவிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையில் திறப்பு விழா முடிந்து மஇகா தேசியத்தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்  புறப்படுகையில் மக்கள் ஓசை நிருபர் அவரிடம் நாளை நடைபெறவிருக்கும் மஇகா தேசிய ஆண்டுக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அமல்படுத்தப்படுமா என்று கேட்டதற்கு ஆண்டுக்கூட்டத்திற்கு  தேசிய முன்னணி தலைவர் அஹமட் ஜாஹிட் வருகை புரியவிருக்கிறார். அவரின் நிச்சயம் சில கோரிக்கைகள் முன் வைக்கப்படும் என்றும் அதே வேளை சில முக்கிய முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here