ஷா ஆலம்:
மக்கள் மத்தியில் மஇகா மீதான நம்பிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் குறிப்பிட்ட ஒரு சமயத்தில் சுணக்கத்தை சந்தித்துள்ளன. அதே போல் தான் மஇகாவும் சில காலம் இறங்குமுகத்தை சந்தித்தது.

ஆனால் மக்கள் மத்தியில் மஇகாவிற்கு மீண்டும் மதிப்பும் மரியாதையும் கூடுகின்றது.அதனை கண் கூடாக பார்க்க முடிகின்றது என்று இன்று ஷா ஆலம் ஐபிசிசி மண்டபத்தில் நடைபெற்ற மஇகாவின் 78ஆவது தேசிய பேரவையில் கொள்கை உரையாற்றிய விக்னேஸ்ரன் குறிப்பிட்டார்.
மேலும் தேசிய முன்ணனி மீதான நம்பிக்கையும் மக்கள் மத்தியில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அண்மையில் நடைபெற்ற கிளாந்தான் (நெங்கிரி) இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறுவது கடினம் என கருதினேன்.
ஆனால் அந்த தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எனவே வரும் ஜோகூர், மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் தேசிய முன்னணி தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்குள் உள்ளது என விக்னேஸ்வரன் கூறியதும் அரங்கில் கூடியிருந்தவர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் எழுந்தது.



















