ஷா ஆலம்:
மஇகா புதிய தலைமையகம் மூன்று கோபுரங்களாக நிர்மாணிக்கப்படும். கட்டி முடிக்கப்பட்டதும் ஆண்டுக்கு 3.5 கோடி ரிங்கிட் வருமானம் கிடைக்கும் என்று தலைமை பொருளாளர் டான்ஸ்ரீ எம். ராமசாமி கூறினார்.
இந்த வருமானம் இந்திய சமுதாயத்தின் பொருளாதாரம், கல்வி மேன்மைக்கு பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
இம்மூன்று கோபுரங்களில் மஇகா தலைமையகம், பிரமாண்ட மாநாட்டு மண்டபம், எம்ஐஇடி அலுவலகம், ஹோட்டல், அப்பார்ட்மெண்ட், ஷாப்பிங் மால் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
இன்னும் ஐந்து மாதங்களில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டட நிர்மாணிப்பு பணிகள் தொடங்கும் என்ற அவர் இதில் 1,200 கார் பார்க் வசதியும் இருக்கும் என்று சொன்னார்.
இப்புதிய கட்டடத்தின் மாதிரியை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.