பாட்னா: பீகாரின் ஜமுயி மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு லண்டனில் உள்ள கூகுள் அலுவலகத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்து உள்ளது. வரும் அக்., மாதம் அவர் பணியில் சேர உள்ளார்.
படித்து முடித்ததும் 2022ம் ஆண்டு ஆண்டுக்கு ரூ.1.08 கோடி சம்பளத்தில் அமேசான் நிறுவனத்தில் பணி கிடைத்தது. 2023ம் ஆண்டு வரை அங்கேயே பணியாற்றிய அவர், ஜெர்மனியில் உள்ள பன்னாட்டு முதலீட்டு நிதி நிறுவனத்தில் பணியாற்றினார். இருப்பினும் கூகுளில் பணியில் சேர வேண்டும் என்ற நோக்கம் இருந்து வந்தது. பணியில் 8- 9 மணி நேரம் பணியாற்றிவிட்டு எஞ்சிய நேரத்தில், கூகுளில் சேர்வதற்கான தகுதியை வளர்த்து கொண்டார். அதற்கு தேவையான படிப்புகளை படித்து வந்தார்.
அவரது கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் பலன் கிடைத்தது. சமீபத்தில் நடந்த நேர்முக தேர்வில் அபிேஷக் குமார் வெற்றி பெற்றார். அவருக்கு ஆண்டு சம்பளமாக ரூ.2.08 கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் அக்.,மாதம் பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
தனக்கு கிடைத்த பணி வாய்ப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், அனைத்தும் சாத்தியமே. எந்த நகரத்திலும், கிராமத்திலும் வசித்தாலும் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்தால் எதுவும் சாத்தியம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.