ஆஸ்திரேலியாவை உலுக்கிய இரட்டைக் கொலை; 47 ஆண்டுக்குப் பிறகு குற்றவாளி கைது

ரோம்: ஆஸ்திரேலியாவில் 47 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய நபரை, ரோம் நகரில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 1977ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள எஸ்ஸே வீதியைச் சேர்ந்த சுஷானே ஆம்ஸ்ட்ராங்,27, சுசன் பார்ட்லெட்,28, ஆகியோர், அவர்களின் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஆம்ஸ்ட்ராங் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், அவரது 16 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

மெல்போர்னை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். உடல்களை மீட்பதற்கு 3 தினங்களுக்கு முன்பு, கத்தியுடன் சுற்றித் திரிந்த 18 வயது இளைஞரை பிடித்துள்ளனர். ஆனால், அந்த நபர் தான் குற்றவாளி என்பதை அறியாமல், அவரை  போலீஸார்  விடுவித்து விட்டனர்.

பின்னர், குற்றவாளி குறித்து அடையாளம் கண்ட  போலீஸார்,  அந்த நபர் கிரீக் – ஆஸ்திரேலியா நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்றவர் என தெரிய வந்தது. குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானத்தை அறிவித்து, போலீஸார்  துப்பு துலக்கி வந்தனர். மேலும், குற்றவாளி குறித்து முழு விபரத்தையும் அறிந்த போலீஸார் அவர் கிரீக் நாட்டின் குடியுரிமை பெற்று தஞ்சம் புகுந்திருந்ததால்,கைது செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், 47 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்போர்ன் இரட்டைக் கொலை வழக்கு குற்றவாளியை, இத்தாலியின் தலைநகர் புமிசினோ ஏர்போர்ட்டில் வைத்து  போலீஸார்  கைது செய்தனர். 18 வயதில் செய்த குற்றத்திற்காக 65 வயதில் குற்றவாளி கைதாகியுள்ளார்.

இது தொடர்பாக விக்டோரியா  போலீஸார்  தலைமை கமிஷ்னர் ஷேன் பேட்டன் கூறுகையில்,’47 ஆண்டு கால பழமையான, மிகவும் நீண்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது,’ எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here