ஷா ஆலம்:
இன்று பிற்பகல் தொடர்ந்து பெய்த கனமழையால் இங்குள்ள ஜாலான் கெபுன், ஸ்ரீ மூடா மற்றும் கோத்தா கெமுனிங்கைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
குறித்த இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக இரண்டு அறிக்கைகள் கிடைத்ததாக ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.