கோலாலம்பூர்:
பள்ளிச் சிற்றுண்டிச் சாலையில் பொரித்த கோழி, சாக்லட் பானம் சாப்பிட்டதால், ஈப்போ, செப்போர் ஆரம்ப பள்ளியைச் சேர்ந்த 101 மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட உணவைச் சாப்பிட்டப் பின்னர் நேற்று காலை 8 மணியளவில் அந்தப் பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள் முதலில் பாதிக்கப்பட்டனர். வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி , காய்ச்சல் போன்றவற்றால் அவர்கள் அவதிப்பட்டனர் என்று முன்னதாக தகவல் பெறப்பட்டது என்று பேராக் மாநில சுகாதார இலாகா இயக்குநர் டாக்டர் ஃபெய்சுல் இட்ஸ்வான் முஸ்தாப்பா தெரிவித்தார்.
அந்த மாணவர்கள் அனைவரும் முதலில் ஈப்போ சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிளினிக்குகளில் சிகிச்சை பெற்றனர். அதனைத் தொடர்ந்து கிந்தா மாவட்ட சுகாதார இலாகா தொற்று நோய் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்தப் பள்ளியில் விரிவான ஆய்வை மேற்கொண்டனர்.
அதில் மேலும் 96 மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது. அவர்களில் 50 பேர் மாணவிகள், மேலும் 51 பேர் மாணவர்களாவர்.







