OUM : ஓயுஎம் டிஜிட்டல் பல்கலைக்கழகம்

நாட்டின் முன்னணி டிஜிட்டல் பல்கலைக்கழகமான ஓயுஎம் எனப்படும் மலேசிய பொதுப் பல்கலைக்கழகம் தனது 28ஆவது பட்டமளிப்பு விழாவை வரும் அக்டோபர் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடத்தவுள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு துறைகளில் டிப்ளோமா பட்டம் தொடங்கி முனைவர் பட்டம் வரை பெறவுள்ளனர். ஓயுஎம் பல்கலைக்கழகம் பொதுவான, தொலைதூர, டிஜிட்டல் கல்வியை வழங்கி வருகிறது.

இதன்மூலம் பட்டப்படிப்பு முடிந்ததும் பட்டதாரிகள் எளிதாக வேலை வாய்ப்பைப் பெற முடிகிறது. அதேசமயம் வேலை செய்பவர்கள் எளிதாக உயர்கல்வியைத் தொடரவும் முடிகிறது.

அனைவருக்குமான பல்கலைக்கழகம் எனும் சுலோகத்தைக் கொண்டு இந்தப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. வேலை செய்துகொண்டே உயர்கல்வி கற்பவர்கள் ஆன்லைன் மூலமாகவே தங்கள் கல்வியைத் தொடரக்கூடிய வாய்ப்பை இது வழங்குகிறது.

கல்வி, வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், அறிவியல், சமூக அறிவியல், மனிதவியல் ஆகிய துறைகளில் இந்தப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்க முடியும். 55 கல்வித் திட்டங்களை இந்தப் பல்கலைக்கழகம் கொண்டிருக்கிறது. மேல் விவரங்களுக்கு: [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here