நெகிரி செம்பிலான் DAP தேர்தல்: மாநில கட்சி தலைவராக அந்தோனி லோக் நீடிப்பார்

சிரம்பான்:

நேற்று நடந்த நெகிரி செம்பிலான் மாநிலக் கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து, 2024/2027 காலத்திற்கான நெகிரி செம்பிலான் DAP தலைவராக DAP பொதுச் செயலாளர் அந்தோனி லோக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெகிரி செம்பிலான் DAP கட்சித் தேர்தலில் புதிதாக மொத்தம் 15 உறுப்பினர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2004 ஆம் ஆண்டு முதல் இந்தப் பதவியை வகித்து வரும் லோக், அங்குள்ள மொத்தம் 658 பிரதிநிதிகளிடமிருந்து 571 வாக்குகளைப் பெற்று, வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்தார்.

துணைத் தலைவர் பதவியை சிரம்பான் ஜெயா மாநிலங்களவை உறுப்பினர் பி.குணசேகரன் தக்கவைத்துக் கொண்டார்.

மேலும் இரு மாநில துணைத் தலைவர் பதவிகளுக்கு நெகிரி செம்பிலான் உள்ளாட்சி, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்துக் குழுத் தலைவரான நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள் குமார் மற்றும் மாநிலத் தொழில் மற்றும் முஸ்லீம் அல்லாத விவகாரக் குழுத் தலைவரான பஹாவ் சட்டமன்ற உறுப்பினர் தியோ கோக் சியோங் ஆகியோர் தெரிவாகினர்.

அதேநேரம் மாநில DAP செயலாளராக ராசா எம்பி சா கீ சின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here