ரஷியா 2022-ல் இருந்து 6.5 லட்சம் வீரர்களை இழந்துள்ளது: உக்ரைன்

ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி படையெடுத்தது. அதில் இருந்து தற்போது வரை சண்டை நீடித்து வருகிறது. முதலில் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பெரும்பகுதியை இழந்த நிலையில் அமெரி்க்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவுடன் உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த சண்டையில் ரஷியாவுக்கு ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஏறக்கறைய இந்த இரண்டு ஆண்களில் ரஷியா சுமார் 6 லட்சத்து 51 ஆயிரத்து 810 ராணுவ வீரர்களை இழந்துள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷிய ராணுவத்தின் 8869 டாங்கிகள் (Tanks), 17,476 ஆயுத சண்டை வாகனம், 25,495 வாகனங்கள் மற்றும் எரிபொருள் டேங்குகளை அழித்துள்ளதாகவும் உக்ரைன தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 1,170 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டனர் எனவும் உக்ரைன் ஆயுத படை ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார்.

28 கப்பல்கள் மற்றும் படகுகள், ஒரு நீர்மூழ்கி கபப்ல், 16 ஆயிரத்து 186 டிரோன்கள், 328 ஹெலிகாப்டர்கள், 369 விமானங்கள், 962 வான்பாதுகாப்பு சிஸ்டங்கள், 1204 பல ராக்கெட்டுகளை ஏவும் சிஸ்டம், 18 ஆயிரத்து 795 பீரங்கி சிஸ்டங்கள் ஆகியவற்றை அழித்ததாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here