ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் 3ஆவது வார சிறப்பு பூஜை

தென்கிழக்காசிய திருப்பதி என்று போற்றப்படுவதும், மலேசியாவின் முதல் கருங்கல் ஆலயமானதுமான கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் 3ஆவது வார சிறப்பு பூஜை வரும் 5.10.2024 நடைபெறவுள்ளது. காலை 3.30 மணியளவில் சிவன் சன்னதியிலும், 4 மணியளவில் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.

புரட்டாசி மாதமே  விஷேசமானது. அதிலும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விஷேசமானது. இந்நாளில் பெருமாள் வழிப்படும் அதே நேரம் ஆஞ்சநேயரை வழிப்பட்டால் தடைகள் விலகும் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமை எம்பெருமான் பெருமாளை போல ஆஞ்சநேயருக்கு விஷேசமான நாளாகும்.

புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்லாது புரட்டாசி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் 6.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை பால் குட ஊர்வலம நடைபெறும் என்று ஆலயத்தலைவர் சங்கரத்னா சித.ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here