கோலாலம்பூர்:
மொத்த வியாபார மையமான ஜிஎம் கிளாங் (GM Klang) 2024 மலேசிய தூய்மை தினத்தை முன்னிட்டு கிள்ளான் நகர் சுற்றுப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியது.
அந்த வகையில் நிறுவன சமூக கடப்பாடு திட்டமாக பூமி வீரர்கள் தினம் எனும் திட்டத்தை கிள்ளான் மக்களுடன் சேர்ந்து அது மேற்கொண்டது.
தூய்மைமிக்க சுற்றுச்சூழலை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படும் அரசு சாரா அமைப்பான பூமி வீரர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் நடைபெறும் மாபெரும் தூய்மைத் திட்டத்தில் வாயிலாக வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சின் ஆதரவும் கிடைத்தது.
சமுதாயத்தினர் பங்கேற்பு
அரச கிள்ளான் மாநகர் மன்றத்தின் உறுப்பினர் புவான் ஷரிபானுன் பிந்தி சைபோன் இந்த தூய்மைத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
கிள்ளான் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல இன மக்களும் தொண்டூழியர்களும் இதில் கலந்து கொண்டனர். மக்களின் சுபீட்சத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது கூட்டுப் பொறுப்பாகும் என்று மொத்த விற்பனை மையமான GM Klang தொடர்பு துறை மூத்த நிர்வாகி நோ சுஹைடா ஒஸ்மான் கூறினார்.
ஒரு வர்த்தக நிறுவனம் என்ற முறையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதேவேளையில் சமுதாயத்திற்கு பங்காற்றும் ஒரு வழிமுறையாகவும் இது விளங்குகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் தூய்மையை பாதுகாப்பது கூட்டுப் பொறுப்பு எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அனுசரிக்கப்படும் 2024 மலேசிய தூய்மைத் தினத்தின் இலக்கிற்கு ஏற்பவும் இத்திட்டம் அமைகிறது எனவும் அவர் சொன்னார். இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் பணி நடைபெற்றது.
சேகரிக்கப்படும் குப்பைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஒரு. மணி நேரத்திற்கு தூய்மைப் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அவை நிழல்படும் எடுக்கும் போட்டியும் நடந்தேறியது. பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்ட பெரிய குப்பை கலன்களில் வீசப்பட்டது. அதிர்ஷ்டக் குலுக்கலும் நடந்தேறியது. சமுதாயத்தை ஒன்றுபடுத்துவதில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வந்த இதுபோன்ற கூட்டுப் பணியைத் தொடரும் நம்பிக்கையை ஜிஎம் கிளாங் கொண்டிருக்கிறது.