ஷா ஆலம்:
கோலா லங்காட்டில் உள்ள பந்திங்கில் நேற்று நடந்த ஆயுதம் ஏந்திய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை மாலை 4.30 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சந்தேக நபர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டதாக கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஹ்மட் ரித்வான் முகமட் நார் @ சாலே தெரிவித்தார்.
“குறித்த கொள்ளையில் ஒரு உள்ளூர் பெண், முகமூடி அணிந்த இரண்டு உள்ளூர் ஆண்கள் தனது வீட்டிற்குள் நுழைந்ததாக கூறிய அவர், சந்தேக நபர்கள் தனது இரு கைகளையும் கட்டிவிட்டு தப்பிச் செல்வதற்கு முன் விலையுயர்ந்த பொருட்களையும் பணத்தையும் கொள்ளையடித்தனர் என்று அவர் சொன்னார்.
பின்னர் கைகளை விடுவித்துக்கொண்ட புகார்தாரர்,அண்டை வீட்டாரிடம் உதவியுடன் காவல்துறையில் புகாரளித்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்றிரவு சுமார் 8.15 மணியளவில், 30 மற்றும் 21 வயதுடைய இரு சந்தேக நபர்களையும், சுங்கை சேடு, பந்திங்கில் வைத்து கைது செய்ததாக அஹ்மட் ரித்வான் கூறினார்.
இரண்டு சந்தேக நபர்களும் முறையே 11 மற்றும் ஏழு குற்றப் பதிவுகள் உள்ளதாகவும், சந்தேக நபர்களில் ஒருவரிடம் இரண்டு போதைப்பொருள் வழக்கு பதிவுகள் இருப்பதாகவும் காவல்துறை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
“அவர்களிடமிருந்து இரண்டு வகையான தங்க மோதிரங்கள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கருவிகளையும் கைப்பற்றினர்,” என்று அவர் கூறினார்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395 மற்றும் பிரிவு 397 இன் படி விசாரணைக்கு உதவும் வகையில் சந்தேக நபர் ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.