உக்ரேனியக் கிராமத்தைக் கைப்பற்றிய ரஷ்யா

மாஸ்கோ: உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றைத் தனது படைகள் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு அக்டோபர் 17ஆம் தேதியன்று கூறியது.

இந்தக் கிராமம் உக்ரேனின் டொனேட்க்ஸ் பகுதியில் உள்ள முக்கிய நகரமான குராகோவேக்கு மிக அருகில் இருப்பதாக அது தெரிவித்தது.

ரஷ்யத் தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள இத்தகவலை உறுதி செய்ய முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

 

உக்ரேனின் தளவாட மையமான பொக்ரோவ்ஸ்க் நகரை அடைய ரஷ்யப் படைகள் தீவிரமாக முயன்று வருகின்றன.

இந்நிலையில், குராகோவே நகர் அருகில் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களை முறியடித்திருப்பதாக உக்ரேனிய ராணுவம் கூறியது.

ஒன்பது இடங்களில் சண்டை தொடர்வதாக அது தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here