திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: அறங்காவலர் குழுத் தலைவர் முடிவு

அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக பி.ஆர்.நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் குழு உறுப்பினர்களாக 24 பேர் பொறுப்பேற்றுள்ளனர்.

“கடந்த ஆட்சிக் காலத்தைப் போல் அல்லாமல் வெளிப்படைத் தன்மையுடனும் உண்மையுடனும் பாடுபடுவேன். தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்கவேண்டும்,” என்று பி.ஆர்.நாயுடு கூறினார்.

தேவஸ்தானத்தில் பணியாற்றும் மற்ற மதத்தினரை வேறு அரசுப் பணிக்கு மாற்றுவதா அல்லது கட்டாய ஓய்வு கொடுப்பதா போன்றவை குறித்து மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவராகத் தான் நியமிக்கப்பட்டதற்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கும் துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பி.ஆர்.நாயுடு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here