தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு வழித்தடங்களில் ஹலால் உணவுகளை வழங்குவதை நிறுத்த ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது விமானத்தில் உணவு வழங்குவதை எளிதாக்கும் மற்றும் செயல்பாட்டு செலவைக் குறைக்கும் நோக்கம் கொண்டது என்றும், “ஹலால் மாஃபியா” என்று குறிப்பிடப்பட்டதற்கு எதிரான ஒரு தசாப்த கால போராட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா தனது உணவு சேவையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது, குறிப்பாக அதன் இந்து மற்றும் சீக்கிய பயணிகளுக்கு இந்த முடிவு செயற்படுத்தப்படும் என்று அது கூறியது. அதாவது இந்த குழுக்களுக்கு ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவுகளை வழங்குவதை விமான நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளது.
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமானத்தில் உள்ள உணவுகள் சர்ச்சையில் சிக்கியுள்ளதால் இனி இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு ‘ஹலால்’ சான்றளிக்கப்பட்ட உணவை வழங்காது என்றும், இது விமானத்தில் உணவு வழங்குவதை எளிதாக்கும் மற்றும் செயல்பாட்டு செலவைக் குறைக்கும் நோக்கம் கொண்டது என்றும், இஸ்லாமிய உணவு சட்டங்களை பின்பற்றும் ஹலால் உணவுகள், வரலாற்று ரீதியாக முஸ்லீம் பயணிகளின் உணவு விருப்பங்களுக்கு இடமளிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது.












