கார்ப்பரேட் மாஃபியா விசாரணை: என்னதான் முடிவு? கோபிந்த் சிங் கேள்வி

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) அதிகாரிக சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் கார்ப்பரேட் மாஃபியா மீதான புலன் விசாரணையி அந்தஸ்து, ஆகக்கடைசியான நிலவரங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐஜிபி -யை ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரங்கள் தொடர்பில் தன்னுடைய கவலையை இரண்டு மாதங்களுக்கு முன் அமைச்சரவை தெரிவித்தது. அதேசமயம் இதன் தொடர்பில் மு விசாரணையை நடத்த வேண்டும் என்று அமைச்சரவை கேட்டுக்கொண்டது. இருப்பினும் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை என்று டிஜிட்டல்துறை அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மை என்பதே உச்சபட்சமானது. இவ்விவகாரம் தொடர்பில் செய்யப்பட்ட புகார்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் விசாரிக்கப்பட்டனரா என்பதை ஐஜிபி மிகத்தெளிவாக விளக்கமளிக்க வேண்டும். அதேசமயம் இவ்விவகாரம் தொடர்யில் அடுத்தடுத்து என்ன மேற்கொள்ளப்பட்டன என்பதையும் அவர் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நடவடிக்கைகள்

இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புகார்கள் தொடர்பில் எம்ஏசிசி அதிகாரிகள், நிறுவனங்கள் ஒவ்வொரு தனிநபர் ஆகியோரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த விவகாரமானது சாதாரணமானதல்ல. பொது நலன்களைக் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கக்கூடியதாகும்.

நம்முடைய சந்தைகள், தேசிய நிர்வாகங்கள், ஆகியவற்றின் உயர்நெறி கேள்விக்குறியாகி இருக்கிறது. இப்புகார்களை விசாரிக்காமல் அப்படியே விட்டு விடக்கூடாது. சட்டதிட்டத்திற்கு உட்பட்டு மிகக்கடுமையான வழியில் இவற்றுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று கோபிந்த் சிங் கேட்டுக் கொண்டார்.

இந்த விசாரணையை போலீஸ் மட்டுமே நடத்த வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாட்டை அமைச்சரவை விதிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவது மிக முக்கியம். பங்கு ஆணையம் இவ்விவகாரத்தில் தலையிட்டு அதன் பங்கைச் செய்திருக்க வேண்டும். சந்தைத் திரிப்பு சம்பந்தப்பட்டிருந்தால் அல்லது எந்தவொரு நிறுவனத்தின் பங்குகள் மற்றவர்களுக்கு மாற்றப்பட்டிருந்தால் இந்த விவகாரம்

பங்குகள் ஆணையத்தின் அதிகாரத்தின் கீழ் வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளும் இவ்விவகாரத்தில் இதுவரை என்ன நிகழ்ந்திருக்கிறது எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? குற்றம் புரிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரா அல்லது மற்றவர்களுக்குத் துணை புரிந்திருக்கின்றனரா போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்று கோபிந்த் சிங் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here