கோலாலம்பூர்:
கிளாந்தான், கெத்தேரே பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் 61 கத்திக்குத்து காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கைதான முக்கிய சந்தேக நபர் மீது வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
இக்கொலை தொடர்பான புலனாய்வுப் பணிகள் தற்போது 70 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இதர சந்தேக நபர்களில் ஒருவர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.





















