நவம்பர் 7 முதல் 14 வயது சிறுமியை காணவில்லை; பொதுமக்கள் உதவியை நாடும் போலீஸ்

கோத்தா பாரு:

ம்போங் செமுட் அபியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை நவம்பர் 7 முதல் காணவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன சே நோர் குர்ரது ஐனி முகமட் ஜைதி என்ற சிறுமி, கடைசியாக நவம்பர் 7 ஆம் தேதி மாலை 5 மணியளவில் தனது வீட்டை விட்டு ஒரு கடைக்குச் செல்வதாக புறப்பட்டார் என்று,கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் முகமட் ரோஸ்டி டாட் கூறினார்.

சிறுமி காணாமல்போனது தொடர்பில் கோத்தா பாரு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் கடந்த திங்கள்கிழமை மதியம் 1.15 மணியளவில் புகார் கிடைத்தது என்று அவர் சொன்னார்.

காணாமல்போன சிறுமியின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை, மேலும் அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் இன்னும் நடந்து வருகின்றன என்றும், குறித்த சிறுமி காணாமல்போனபோது, கருப்பு சட்டை அணிந்திருந்தார் என்றும், அவர் சுமார் 150 செ.மீ உயரம், 60 கிலோகிராம் எடை, பழுப்பு நிறமாக இருப்பார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குறித்த சிறுமி தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு அல்லது விசாரணை அதிகாரி Sjn Mohd Azmey Mohd Yunus ஐ 017-3430221 அல்லது 09-7752200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here