ஆஸ்பத்திரியில் இடம்மாறிய குழந்தைகள்.. பல வருடங்களுக்கு பின் பள்ளியில் நடந்த டுவிஸ்ட்

சினிமாக்களில் வருவதுபோல் வியட்நாமில் நடந்த ஒரு உண்மை சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாமை சேர்ந்த தந்தை ஒருவருக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் மகள் இருந்துள்ளார். தனது மகள் வளர வளர அவள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் போலும் இல்லாமல் மிகவும் அழகாக இருந்ததால் அவள் உண்மையில் தனக்குத்தான் பிறந்தாளா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.

எனவே மகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளார். இதில் அவள் தனது மகள் இல்லை என்று அவருக்கு தெரியவந்தது. இதற்குப் பிறகு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை தனது மனைவியிடம் குழந்தைப்பேறு இல்லாதவள் என்று கூறி தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

ஆனால் தான் குழந்தை பெற்றதாக சிறுமியின் தாய் உறுதியாக இருந்துள்ளார். சண்டை முற்றிய நிலையில் தனது கணவனை பிரிந்து மகளை அழைத்துக்கொண்டுநாட்டின் தலைநகரான ஹனோய் -க்கு தாய் குடிபெயர்ந்துள்ளார். அங்கு மகளை புதிய பள்ளியில் சேர்த்தார்.

இந்நிலையில் பள்ளியில் மகளின் பிறந்தநாள் விழாவில் அதே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் அவளது தோழியான லான் என்ற சிறுமியை தாய் பார்த்துள்ளார். லான் பார்ப்பதற்கு தன்னைப் போலவே இருப்பதை இந்த தாய் உணர்ந்துள்ளார். எனவே மேற்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் அனைத்திற்கும் விடை கிடைத்துள்ளது.

டிஎன்ஏ பரிசோதனையில் லான் – தான் இவரின் மகள் என்று தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு சிறுமிகளுக்கும் ஒரே மருத்துவமனையில் பிரசவம் ஆகியுள்ளது . மருத்துவமனையில் வைத்து இரண்டு பெண் குழந்தைகளும் இடம் மாறி இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here