பூதாகரமான வீட்டுப் பிரச்சினை

நடிகை சமந்தாவும் அவரது முன்னாள் கணவரும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் இணைந்து வாங்கிய வீடு, இப்போது பூதாகரமான பிரச்சினையாக தெலுங்குத் திரையுலகில் வெடித்துள்ளது.

ஏழு ஆண்டுகளாகக் காதலித்து வந்த நாக சைதன்யாவை சமந்தா கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்.இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சூழலில், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்தத் தம்பதியர் கடந்த 2021ல் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில், நாக சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து வாங்கியிருந்த வீடு இப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட வீடு, உண்மையில் அவர்களது கனவு வீடாகவே இருந்தது என்று கூறலாம்.இந்த வீட்டிற்கு நாக சைதன்யாவை விட சமந்தாதான் அதிகம் செலவு செய்ததாக சில இடங்களில் அவரே கூறியுள்ளார். இதுகுறித்த செலவுகளுக்கான ரசீதுகளும் அவரிடம் உள்ளதாம்.

இதனிடையே நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா மறுமணம் புரிந்துகொண்டார்.

இதனைத்தொடர்ந்து சமந்தாவுடன் இணைந்து வாங்கிய வீட்டில் புது மனைவி சோபிதாவுடன் குடியேற நாக சைதன்யா விரும்புவதாகச் சொல்கிறார்கள்.இந்த முடிவுக்கு சோபிதா சம்மதிக்கவில்லை என்று ஆந்திர ஊடகங்கள் சொல்கின்றன.ஏனெனில், அந்த வீட்டில் அவர்கள் தங்கினால் தன் கணவர் நாக சைதன்யாவுக்கு பழைய மனைவியின் நினைவு வரலாம் என சோபிதா நினைக்கிறாராம்.

தற்போது அந்த வீட்டில் யாரும் இல்லை என்றாலும் விரைவில் சோபிதாவிற்கு அதை நாக சைதன்யா பரிசளிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.இச்சூழலில்தான் சமந்தா நீதிமன்றத்தை நாடப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here