புதுடெல்லி:
இந்தியாவுக்குள் கடத்தப்படவிருந்த 700 கிலோகிராம் ‘மெத்தம்ஃபெட்டமின்’ போதைப்பொருளைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
“ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, கடற்படை, குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவை இணைந்து இதில் ஈடுபட்டன,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
இந்நிலையில், அரசாங்க அமைப்புகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு உள்ளதை இது காட்டுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.