பெண் சம்மதித்தாலும்.. 18 வயதுக்கு உட்பட்ட பாலியல் உறவு வன்கொடுமையே – உயர்நீதிமன்றம் அதிரடி

18 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களின் சம்மதத்துடன் கணவன் ஈடுபடும் பாலியல் உறவும் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018 திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி சிறுமியின் சம்மதத்துடன் பல முறை பாலியல் உறவு வைத்து கொண்ட நபர் வீட்டில் வைத்து மாலை மாற்றி திருமணம் முடித்ததாக அப்பெண்ணை ஏமாற்றியுள்ளார். கர்ப்பமான அந்த பெண் தான் ஏமாற்றப்படுவதைக் கடந்த 2019 ஆம் ஆண்டில் அவர் மீது வழிக்குத் தொடர்ந்தார்.

இதன்படி அவர் மீது பதியப்பட்ட போக்ஸோ வழக்கின் கீழ் அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு வார்தா மாவட்ட நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்து 10 வருட சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதி கோவிந்த் சனாப் முன் கடந்த நவம்பர் 12 அன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் வக்கீல் பெண் சம்மதித்தே இருவருக்கும் உறவு இருந்ததாக வாதிட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி கோவிந்த், பெண்ணின் சம்மதமோ அவர் குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி இருப்பதாலும் நடந்தது பலாத்காரம் அல்ல என்றாகிவிடாது.

அவர்கள் இடையில் நடந்தது திருமணம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு வைப்பது வன்கொடுமை என்றே கருதப்படும் என்று 10 வருட சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here