அசைவம் சாப்பிட்ட பிறகு வீட்டில் விளக்கேற்றலாமா ?

வீட்டில் யாரெல்லாம் விளக்கேற்றால் என்பது பற்றிய சந்தேகமும் பலருக்கும் உள்ளது. அசைவம் சாப்பிட்ட பிறகு என்ன செய்து விட்டு விளக்கேற்றலாம்? விளக்கேற்றுவது பற்றி இருக்கும் பல விதமான சந்தேகங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடுவதை காரணமாக காட்டி விளக்கேற்றாமல் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் தெளிவை தரும்.தெய்வ வழிபாட்டில் மிக முக்கியமானது விளக்கேற்றுவது.

இறைவனை ஜோதி வடிவமாக வழிபடும் பழக்கம் உள்ளதாலும், மகாலட்சுமியின் அம்சம் என்பதாலும் விளக்கேற்றுவது மிகவும் அவசியமாகும். வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் கெட்ட சக்திகள் எதுவும் வீட்டில் தங்காது. அதோடு தெய்வீக சக்திகள், நேர்மறை ஆற்றல்கள் வீட்டில் நிறைந்திருக்கும். வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக விளக்கேற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படி ஏற்றப்படும் விளக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிலரது வீடுகளில் அசைவம் சமைத்தாலோ அல்லது அசைவம் சாப்பிட்டாலோ விளக்கேற்றமாட்டார்கள். அதே போது வீட்டில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் ஆகிய விட்டாலோ அந்த நாட்களில் வீட்டில் விளக்கேற்ற மாட்டார்கள். வீட்டின் பூஜை அறையை பூட்டி வைத்து விடுவார்கள். இது முற்றிலும் தவறானது என்பதே ஆன்மிக சான்றோர்கள் சொல்லும் கருத்தாகும். குடியிருக்கும் வீட்டில் எந்த காரணத்திற்காகவும் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது என்றே நம்முடைய சமயம் சொல்கிறது.

வீட்டில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் ஆகி விட்டால் அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் அல்லது குழந்தைகளை வைத்துக் கூட விளக்கு ஏற்ற செய்யலாம். மற்ற பூஜை எதுவும் செய்ய முடியவிட்டாலும், விளக்கு மட்டுமாவது ஏற்றுவது சிறப்பானதாகும். அதே போல் மாதவிடாய் நாட்கள் முடிந்து அந்த பெண் மீண்டும் பூஜை அறைக்கு திரும்பும் போது வீட்டில் மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து விட்டு, மீண்டும் பூஜைகளை தொடரலாம். மாதவிடாய் என்பது இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வாகும். நம்மை படைத்த இறைவனுக்கு நம்முடைய உடலின் நிலையும், தன்மையும் நன்கு தெரியும். இறைவன் பார்ப்பது உடலை அல்ல. உள்ளத் தூய்மையை மட்டுமே.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here