இலங்கைக்கு மூன்றாவது தவணை கடனுதவி: IMF ஒப்புதல்

கொழும்பு:

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவிக்கான மூன்றாவது தவணையை வழங்க அனைத்துலகப் பண நிதியம் (IMF) நேற்று (நவம்பர் 23) ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், இலங்கையின் பொருளாதாரம் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை என அது எச்சரித்தது.

மூன்றாவது கடன் தவணையாகக் கிட்டத்தட்ட 333 மில்லியன் அமெரிக்க டாலரை இலங்கைக்கு வழங்கயிருப்பதாக IMF வெளியிட்ட அறிக்கையில் அது தெரிவித்தது.

இந்த தவணையுடன் சேர்த்து கிட்டத்தட்ட $1.3 பில்லியன் அமெரிக்க டாலரை இலங்கைக்கு கடனுதவியாக அளித்திருப்பதாக அது மேலும் சொன்னது.

தற்போது பொறுப்பேற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொருளாதார ரீதியில் நாட்டை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் IMF அதில் குறிப்பிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here