நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
இந்நிலையில், கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், “கடைசி இரண்டு ஆண்டுகளாக நான் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைத்துள்ளேன். உங்களுக்கு என்னுடைய சிம்பிள் அட்வைஸ் என்னவென்றால், நீங்களும் சமூக ஊடகங்களை குறைவாக பயன்படுத்துங்கள். குறிப்பாக டுவிட்டரை தவிர்ப்பது நல்லது. என் அனுபவத்தில் இதை சொல்கிறேன். இதைப் பார்த்து எலான் மஸ்க் ஒருவேளை என் டுவிட்டர் கணக்கை முடக்கினால், அதுவே எனக்கு வெற்றிதான்” என்று தெரிவித்தார்.