கனமழை, நிலச்சரிவில் சிக்கி உகாண்டாவில் 30 பேர் பலி

நைரோபி : உகாண்டாவில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் 40 வீடுகள் மண்ணில் புதைந்தன; 30 பேர் பலியாகினர்.

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் கிழக்கு பகுதியில் உள்ள புலாம்புலி பகுதியில் நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது. மலைப்பிரதேசமான இந்த பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஆறு கிராமங்களில் 40 வீடுகள் மண்ணில் புதைந்தன.இடிபாடுகளில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சடலங்களை மீட்டனர்.

இதில் பெரும்பாலனவை குழந்தைகளின் சடலங்கள். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.நிலச்சரிவு காரணமாக சாலைகளில் சேறும் சகதியுமாக காணப்படுவதாலும், தொடர்ந்து மழை பெய்வதாலும் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் மண்ணில் சில வீடுகள் முழுமையாக புதைந்துள்ளன.

சில வீடுகளின் கூரை மட்டும் வெளியே தெரிகின்றன. இந்நிலையில் நைல் நதியில் பக்வாச் பாலம் மூழ்கியதை அடுத்து மீட்புப்பணிக்கு சென்ற இரு படகுகள் ஆற்றில் கவிழ்ந்தன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here