இணைய பகடிவதையின் காரணமாக உருவாகும் மனோவியல் சிக்கல்கள்

கோலாலம்பூர், டிச. 02 –

இணைய பகடிவதையின் காரணமாக உருவாகும் மனோவியல் சிக்கல்கள்,  அதன் பாதிப்பு என்ன? அதிலிருந்து விடுபடும் வழிமுறை என்ன? விளக்குகிறார்
பொது சுகாதார நிபுணரும் இணைய பகடிவதை ஆய்வாளருமான டாக்டர் விக்னேஸ்வரன் சுப்பிரமணியம்.

பள்ளிகளில், குடும்பத்தில், தொழில் இடத்தில், பொது வெளியில் வழக்க
நடைமுறையிலான அந்தக் காலம் தொட்டு நிகழ்ந்துவரும் பகடிவதை (traditional bully- ing). இணைய பகடிவதை (Cyberbullying) என பகடிவதையை இரண்டு விதமாக வகைப்படுத்தலாம்.

அதில் சிறுவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்படுவதுண்டு. பொதுவாக. இந்த வதைக்கு ஆளாகுபவர்கள் என்ன மாதிரியான மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பகடிவதை தொடர்பான விளைவுகளையும் அது
தொடர்பான விழிப்புணர்வு சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது. சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டின் தேவை. தேவையற்றவை குறித்த அடிப்பட்டை தகவல்களையாவது பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே புரிய வைக்க வேண்டும்.

தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் அல்லது கேலிகள் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அடிக்கடி பயம், தன்னம்பிக்கையின்மை, தனிமை உணர்வு. காயப்படுத்தும் எண்ணங்கள், எதிலும் கவனமின்மை, தூக்கமின்மை, பசியின்மை, அதிகம் சாப்பிடுதல், பி.டி.எஸ்.டி. (Post&Traumatic Stress Disorder). சலிப்புணர்வு, படபடப்பு, அவமதிக்கப்படுவதாக உணர்தல். வெறுப்பு போன்ற தன்மைகளை உருவாக்கும்.

இதனால் மன அமைதி குலைந்து. விரக்தி ஏற்பட்டு நாள்பட்ட மன அழுத்தத்துக்கு வழிவகுக்கலாம்.

தற்காலச் சூழலில் இணைய இணையத்தில் நீடித்த தாக்குதல்கள் நபர்களின் மன நலனைப் பாதிக்கும். இது சமூக பகடிவதை பெரும் சிக்கலாகப் பார்க்கப்படுகிறது. உறவுகளையும் பாதிக்கும்.

சிலர் தங்கள் உணர்ச்சிகளைக் கையாள முடியாமல் இருக்கும்போது. தற்கொலை எண்ணங்கள் தோன்றலாம். இது குறிப்பாக குழந்தைகள், இளையோரிடத்தில் அச்சுறுத்தலாக இருக் கும்.

இவை அனைத்தும் மனநல அடிப்படை சிகிச்சை மூலமாகவும் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன் சமூக ஆதரவை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்குவதன் மூலம் கட்டுப்படுத்தப்படலாம்.

இணைய பகடிவதையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுற்றியுள்ளவர்கள் மனோரீதியிலான வழிகாட்டல்களை வழங்கலாம். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அமைதியாக கேட்டு புரிந்து கொள்ளுங்கள். குற்றம் சாட்டி மேலும் கவலையை ஏற்படுத்தாமல் தீர்வுக்கு வழிகாட்டுங்கள்.

முக்கியமாக. ‘நீங்கள் தனியாக இல்லை’ அல்லது ‘நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம்’ என்ற வாக்குறுதிகளை வழங்குவதால், அவர்களை குற்றவாளியாக உணர வைக்காமல், அவர்களின் உணர்வுகளை மதித்தல், அவர்களின் நீங்கள் பயப்படுவது அல்லது கோபப்படுவது சாதாரணமானது என்று கூறி அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல், உணர்வுகளை அங்கீகரித்தல், தன்னம்பிக்கையை மீட்டெடுக்க உதவுதல், அவர்களின் திறமைகள் தனிப்பட்ட திறமைகளை நினைவூட்டுதல். உளவியல் ஆலோசனைக்கு வழிகாட்டுதல், தேவையான பாதுகாப்பை ஏற்படுத்துதல் போன்றவை அசம்பாவித முடிவுகளை எடுக்க விடாமல் தடுக்க வகை செய்யும்.
மேலும், மனநல உதவி பெற அல்லது ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்ய ஊக்கப்படுத்தலாம்.

சமூக வலைத்தளங்களில் உளவியலாளர்களுடன் அல்லது மனநல தடை. புகார் அளிக்கும் முறைகளைக் கற்றுக்கொடுத்து உதவலாம். போலீஸ் புகார் செய்வது குறித்த ஆலோசனைகள் வழங்குவதுடன் சட்ட ஆலோசனைகளும் கொடுக்கலாம்.
எம்.சி.எம்.சி. எனப்படும் மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம். இணைய பகடி வதை தடுப்பு குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது. மேலும் அது தொடர்பான அமைப்புகள் மூலமாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் தேவையான செய்திகளை இலகுவாகப் பெற முடிகிறது. இணைய பகடிவதைப் பாதிப்புகளிலிருந்து விடுபட இதுவும் பேருதவியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here