OUM: தினாவுக்கு சிறப்பு பல்கலைக்கழக விருது! லீ லாம் தாய்க்கு கௌரவ முனைவர் பட்டம்!

(By Our Reporter T.Mohan)

கிளானா ஜெயா, சிலாங்கூரில் செயல்படும் டிஜிட்டல் பல்கலைக்கழகம் OUM ஆகும் மலேசிய ஒப்பன் பல்கலைக்கழகமான OUM பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 28ஆவது பட்டமளிப்பு விழாவில் தேசியப் பூப்பந்து வீராங்கனை தினா முரளிதரனும் சமூகத் தொண்டர் டான்ஸ்ரீ லீ லாம் தாயும் கௌரவிக்கப்பட்டனர். தினாவுக்கு பல்கலைக்கழக சிறப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது.

        உலக விளையாட்டரங்கில் தினா படைத்துவரும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது. அவர் ஒலிம்பக் போட்டியில் மலேசியாவைச் பரதிநிதித்திருக்கின்றார். டான்ஸ்ரீ லீ லாம் தாய்க்கு கல்வித்துறையின் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. கல்வித்துறையில் அவர் ஆற்றிவரும் பங்கை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இவர் கடந்த 15 ஆண்டுகளாக OUM கவர்னர்கள் வாரியத்தின் தலைவராகவும் பங்காற்றியுள்ளார்.

இவர் 2022ஆம் ஆண்டு வரை ஓயுஎம் பல்கலைக்கழகத்தில் தனது சேவையை ஆற்றியுள்ளார். தினாவுக்கும் லீ லாம் தாய்க்கும் ஓயுஎம் இணை வேந்தர் டான்ஸ்ரீ அஸ்மான் ஹசிம் இந்தச் சிறப்பு விருதையும் முனைவர் பட்டத்தையும் வழங்கிச் சிறப்பு செய்தார். 26 வயதான தினா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் பட்டப்படிப்பை முடித்தவர்.

இந்தப் OUM பல்கலைக்கழகம் கிளானாஜெயா சிலாங்கூரில் செயல்படும் Digital
பல்கலைக்கழகமாக உள்ளது. வேலை செய்யும் பெரியவர்களின் கல்வி தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 57 முழுமையான ஆன்லைன் கல்வியை இது வழங்குகிறது.

2000ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் தோற்றம் கண்டது முதல் ஒயுஎம் பல்கலைக்கழகம் டிப்ளோமா தொடங்கி முனைவர் பட்டப்படிப்பு வரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறது. அடுத்த ஆண்டு இப்பல்கலைக்கழகம் 25ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here