சுடு நீர் ஊற்றி 10 வயது மகளை சித்திரைவதை செய்ததற்காக 32 வயது தாயாரை போலீஸ் கைது செய்தது.
கம்போங் தெங்ஙாவில் உள்ள ஒரு வீட்டில் பின்னிரவு 12.30 மணிக்கு அப்பெண் கைது செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முகமட் நோ கூறினார்.
சுடுநீர் ஊற்றபட்டதால்அந்த 10 வயது மாணவியின் முதுகு வெந்து போயிருந்ததை பார்த்து பள்ளி தலைமையாசிரியர் போலீஸில் புகார் செய்தார். மேலும் சோதித்து பார்த்ததில் வலது கால், தாடை, இடது கால் ஆகிய பகுதிகளிலும் சுடுநீர் ஊற்றப்பட்ட தழும்புகள் இருந்ததை தலைமையாசிரியர் பார்த்திருக்கிறார் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் பாஹ்ரின் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தத் தாய் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
























