நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம்

ஐதராபாத்,தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சோபிதா துலிபாலா ‘பொன்னியின் செல்வன்’ உட்பட பல தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம்  ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சிரஞ்சீவி, பிரபாஸ், ராஜமவுலி, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ராம்சரண், நயன்தாரா, மகேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

இதில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். திருமணத்தைத் தொடர்ந்து, இருவரும் திருப்பதி கோயில் அல்லது ஸ்ரீசைலம் கோயிலுக்குச் சென்று ஆசி பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் திருமண மண்டபத்தில் மணமக்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here