பலியான ரசிகைக்கு இரங்கல் தெரிவித்த அல்லு அர்ஜுன்: ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

திருப்பதி:தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகை ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.

அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியதாவது:இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த குடும்பத்தினருடன் உறுதுணையாக இருப்போம்.இந்தச் சம்பவம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் படத்தின் கொண்டாட்டங்களில் தங்களால் பங்கேற்க முடியவில்லை.

ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க உள்ளேன்.
புஷ்பா 2 படக்குழுவினரிடம் இருந்து ரேவதி குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம்.இந்த நேரத்தில் அவர்கள் வலியை உணர்ந்துள்ளேன். விரைவில் அவர்களைச் சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here