கோலாலம்பூர் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 106 கள்ளக்குடியேறிகள் கைது

கோலாலம்பூர்:

ன்று அதிகாலை 4.30 மணியளவில் கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையில் மேற்கொள்ளப்பட்ட Op Taring Nyah II என்ற குறியீட்டு சோதனையில் மொத்தம் 106 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

கோலாலம்பூர் ஃபெடரல் ரிசர்வ் படை (PSP) மற்றும் மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) ஆகியவற்றுடன் இணைந்து தாம் சோதனையை நடத்தியதாக தேசிய காவல்துறையின் பொது நடவடிக்கைப் படையின் (PGA) மூத்த துணை ஆணையர் சுல்கிப்லி தெரிவித்தார்.

“சோதனையின் விளைவாக, சரியான அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்காத மூன்று பெண்கள் உட்பட 106 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 46 மியன்மார் பிரஜைகள், 28 இந்தோனேசிய பிரஜைகள், 19 பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் 13 இந்திய பிரஜைகள் அடங்குவர் என அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here