சோல்:
தென்கொரிய முன்னாள் தற்காப்பு அமைச்சர் கிம் யோங் ஹியுன், சோல் தடுப்புக்காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தென்கொரிய சீர்திருத்தச் சேவை உயரதிகாரி ஷின் யோங் ஹே புதன்கிழமையன்று (டிசம்பர் 11) கூறினார்.
தடுப்புக்காவல் நிலையத்தின் கழிவறையில் தனது ஆடையைப் பயன்படுத்தி கிம் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும், அதிகாரிகள் கழிவறைக் கதவைத் திறக்க முற்பட்டபோது அவர் தனது முயற்சியைக் கைவிட்டதாகவும் டிசம்பர் 11ஆம் தேதி தன்னிடம் அளித்த அறிக்கையில் அதிகாரிகள் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் கிம் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் சொன்னார். மேலும் இத்தகவல்கள் அனைத்தையும் ஷின் யோங் ஹே தென்கொரிய நாடாளுமன்றக் கூட்டத்தின்போது உறுதிப்படுத்தினார்.