விரைந்து Simpan SSPN கணக்கு திறந்து அதன் வைப்புத் தொகையை அதிகரித்து ஆண்டுக்கு 8,000 ரிங்கிட் வரை வரி விலக்கு பெறுங்கள் என்று மலேசிய மக்களை PTPTN கேட்டுக்கொள்கிறது. 2025ஆம் ஆண்டு நிகர சேமிப்பின் அடிப்படையில் வரி மதிப்பீடு செய்யப்படுகிறது.
வேறு எந்தச் சேமிப்பும் இந்தச் சலுகையை வழங்குவது இல்லை.
Simpan SSPN அதன் வைப்புத் தொகையாளர்களுக்கு பல்வகை பலன்களையும் சிறப்புச் சலுகைகளையும் வழங்குகின்றது. அவற்றுள் மொத்த சேமிப்புக்கு ஆண்டுக்கு 8,000 ரிங்கிட் வரை வரி விலக்கு அளிப்பதும் அடங்கும். நடப் பாண்டில் மொத்த சேமிப்பின் அடிப்படையில் வரி விலக்கு சலுகை வழங்கப்படுகிறது.
வரி மதிப்பீட்டு தகுதிக்கான வகைகள்:
வரி மதிப்பீட்டு தகுதியானது தனித்தனி வரி மதிப்பீடு மேலும் கூட்டு வரி மதிப்பீடு என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தனித்தனி வரி மதிப்பீடு:
பயனாளிகளுக்காக (பிள்ளைகள்) தொடங்கப்பட்ட Simpan SSPN கணக்கிற்கு, தந்தை அல்லது தாய் ஆகிய இருவரில் ஒருவர் ஆண்டுக்கு அதிகபட்சமாக 8,000 ரிங்கிட் வரை வருமான வரி விலக்கைப் பெற முடியும்.
கூட்டு வரி மதிப்பீடு:
பயனாளிகளுக்காக (பிள்ளைகள்) தொடங்கப்பட்ட Simpan SSPN கணக்கிற்கு, கணவன், மனைவி இருவரும் இணைந்து ஆண்டுக்கு அதிகபட்சமாக 8,000 ரிங்கிட வரை வருமான வரி விலக்கைப் பெற தகுதி உடையவர்களாவர்.
ரதி தேவியின் மனச்சான்று
Simpan SSPN – இல் தம்முடைய 16,14,10 வயதிலான 3 பிள்ளைகளின் உயர்கல்விக்காக சேமிக்கத் தொடங்கி இருப்பதாக உயர்கல்வி அமைச்சின் கொள்கை, ஆராய்ச்சிப் பிரிவின் உயர்நிலை உதவித் தலைமைச் செயலாளராகப் பணி புரியும் ரதி தேவி த/பெ ஏ.ராமசாமி (வயது 48)கூறுகிறார்.
தம்முடைய இந்தச் சேமிப்புக்கு அதிகப்பட்சமாக 8,000 ரிங்கிட் வரை வரி விலக்கு அளிக்கப்படுவது என்பது பெரும் ஊக்குவிப்பாக இருக்கிறது.
ஆண்டு வரி மதிப்பீட்டிற்குப் பிறகு மிகப் பெரிய அளவில் வரி விலக்கு தரப்படுவது இந்தச் சேமிப்பில் பங்கேற்பதற்கு ஓர் உந்துசக்தியாகத் திகழ்கிறது. இவ்வாறான வரி விலக்கு வேறு எந்தச் சேமிப்பிலும் கிடையாது என்பது நிதர்சனம்.
அதுமட்டுமன்றி அரசாங்கத்தின் உத்தரவாதம் பெற்ற ஒரு சேமிப்புத் திட்டமாகவும் இது திகழ்கிறது. இதில் எவ்வித ஐயப்பாடும் அச்சமும் இன்றி பொதுமக்கள் இத்திட்டத்தில் அவர்களின் பணத்தைச் சேமிக்கலாம். தங்களின் பிள்ளைகளுக்கு இப்போதிலிருந்தே அவர்களின் உயர்கல்விக்குச் சேமிப்பது அந்தக் கட்டத்தை எட்டும்போது பெற்றோருக்குச் சுமையில்லாத ஒரு சுகமான சேமிப்பாக Simpan SSPN இருக்கும் என்று ரதி தேவி குறிப்பிட்டார்.

மிகச்சிறந்த மேலும் வெளிப்படையான பாதுகாப்பையும் Simpan SSPN கொண்டிருக்கிறது. இதுவே நமக்கு ஒரு மிகப் பெரிய நிம்மதியாக இருக்கிறது. இது ஒரு நேரடியான சேமிப்பு. அரசாங்கத்தின் முழு உத்தரவாதம் பெற்றது என்ற அவர் 6 வயது முதல் தன்னுடைய 3 பிள்ளைகளுக்கும் Simpan SSPN சேமிப்பைத் தொடங்கிவிட்டதாக ரதி தேவி தெரிவித்தார்.
WOW குலுக்கில் பங்கேற்பீர் – 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பரிசுகளை அள்ளிச் செல்வீர்! Simpan SSPN வைப்புத் தொகையாளர்கள் Cabutan Tahunan WOW எனும் குலுக்கலில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். Simpan SSPN 2025 குலுக்கல் 31 டிசம்பர் 2025 வரை நடைபெறும். 550 வெற்றியாளர்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கவர்ச்சிகரமான பரிசுகள் காத்திருக்கின்றன.myPTPTN ஆன்லைன் வழி எளிமையாக, விரைவாக, பாதுகாப்பாக Simpan SSPN கணக்கு திறக்கலாம், வைப்புத் தொகையை அதிகரிக்கலாம்.




















