பிரிட்டிஷ் அனைத்துலக கல்விச் சங்கம் (BEA) ஆண்டுதோறும் STEM இளையோர் புத்தாக்கப் போட்டியை நடத்தி வருகிறது.
இப்போட்டியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல். கணிதம் (STEM) ஆகிய துறைகளில் 6 முதல் 21 வயது வரையிலான மாணவர்களை ஆராய்ச்சிகள் நடத்திடுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது.
இதற்கு UK கல்வி அமைப்புகளான UCL, Imperial College போன்றவை ஆதரவு நல்கி வருகின்றன. இப்போட்டியானது உலகளாவிய அளவில் நிலைத்தன்மைமிக்க புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.
தொடக்கத்தில் பிரிட்டிஷ் மாணவர்களுக்காக 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் அனைத்துலகப் போட்டியாக விரிவுபடுத்தப்பட்டது. அப்போது டுரோன் தொழில்நுட்பம் வழி வனவிலங்குப் பாதுகாப்பு கருப்பொருளுடன் அறிமுகம் கண்டது.
2020 முதல் இப்போட்டி உலக அளவில் பங்கேற்பை ஈர்த்தது. 2024ஆம் ஆண்டு கருப்பொருள்: ‘நிலையான ஸ்டைல்ஸ் – எதிர்கால வடிவமைப்பு (Sustainable Syles & Threads of the Future) ஆகும்.
இப்போட்டியில் நெகிரி செம்பிலான். போர்ட்டிக்சனைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் பிரகாசித்தன. பாசிர் பாஞ்ஜாங் இடைநிலைப்பள்ளி, டத்தோ முஹம்மட் யூசோப் இடைநிலைப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் காப்பி பவுடரில் இருந்து துணி தயாரித்தது. Garment Tracker app உருவாக்கியது ஆகியவற்றுக்காக மூன்றாம் பரிசை வென்றனர்.
அதேசமயத்தில் பாசிர் பாஞ்ஜாங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த Green Girls என்ற மூன்று மாணவிகள் அடங்கிய குழுவினர் பால் கழிவுகளில் இருந்து பால் துணி, சுற்றுச்சூழல் விவேக குப்பைத் தொட்டி, மறு பயனீட்டுக்கு உகந்த டோட் பைகள் (tote bags) ஆகிய கண்டுபிடிப்புகளுக்கு Emerging Impact Award விருது பெற்றனர்.
இந்த இரு குழுக்களின் மதியுரைஞராக Xplore Mindz அமைப்பைச் சேர்ந்த திரு. ரோஹன் ஆறு செயல்பட்டார். இவரின் நிபுணத்துவ வழிகாட்டுதல் தாக்கம் மிகுந்த தீர்வு. ஆக்கச் சிந்தனைகளுக்கு உருமாற்றம் போன்றவற்றுக்கு பேருதவியாக இருந்தது. இம்மாணவர்களின் இந்த மாபெரும் வெற்றிக்கு இவரின் வழிகாட்டல் பேருதவியாக இருந்தது.
ரோஹனின் அறிவுரைகள், வழிகாட்டல் உலக மேடையில் படைப்பு தைரியத்தை இம்மாணவர்களுக்குக் கொடுத்தது.
இவர்களின் இந்த மாபெரும் வெற்றி மலேசியாவின் பெயரை உலக அரங்கில் தூக்கிப் பிடித்தது. உலக அளவில் எதிர்காலக் கண்டுபிடிப்புகளுக்கு STEM சக்தியின் வலிமையை பிரதிபலித்திருக்கிறது.
* சங்கீதன் த/பெ வீரப்பன் (படிவம் 5- பாசிர் பாஞ்ஜாங் இடைநிலைப்பள்ளி)
* சுதர்சன் த/பெ மகேந்திரன் ( படிவம் 5-பாசிர் பாஞ்ஜாங் இடைநிலைப்பள்ளி)
* தெய்வீக சிகாமணி த/பெ மாசிலாமணி (படிவம் 4-பாசிர் பாஞ்ஜாங் இடைநிலைப்பள்ளி)
* எம்.கவின்ராஜ் (படிவம் 2- பாசிர் பாஞ்ஜாங் இடைநிலைப்பள்ளி)
* டெஸ்மண்ட் ஜோர்ஜ் த/பெ சிரில் (படிவம் 1- டத்தோ முஹம்மட் யூசோப் லிங்கி இடைநிலைப்பள்ளி)
*சிவபிரியங்கா த/பெ கேது ( படிவம் 3- பாசிர் பாஞ்ஜாங் இடைநிலைப்பள்ளி) *காஸ்மிரா த/பெ மோகனரங்கம் (படிவம் 3- பாசிர் பாஞ்ஜாங் இடைநிலைப்பள்ளி)
*பவித்ரா த/ பெ யுவராஜன் (படிவம் 3- பாசிர் பாஞ்ஜாங் இடைநிலைப்பள்ளி)
மேல் விவரங்களுக்கு: திரு.ரோஹன் ஆறு 011-26000478.