சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்; ராணுவ தாக்குதலில் 127 பேர் பலி

கார்டூம்,சூடானில் உள்நாட்டு கலவரம் நீடித்து வரும் நிலையில் துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டது. இதில் 127 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் ஆட்சியை நடத்தி வருகிறார். துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார்.

இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 2022-ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போராக மாறி கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள கிராமங்களை துணை ராணுவப்படை வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ராணுவ ஆட்சியை கவிழ்க்க சதி தீட்டி வருகின்றர்.

இந்த நிலையில் துணை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களை குறிவைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 127 பேர் வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதற்கு துணை ராணுவம் பதிலடி கொடுக்கும் என்பதால் உள்நாட்டு போர் தீவிரம் அடையும் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here