நீரில் ரசாயன கலவை: தொழிற்சாலை நிர்வாகி, சூப்பர்வைசர் கைது

பாசிர் கூடாங் தொழில்பேட்டைக்கு அருகில் உள்ள சுங்கை பூலோவில் ரசாயனம் கொண்டு நீரை மாசுபடுத்தினர் என்ற புகாரின் அடிப்படையில் ஒலியோரசாயன தொழிற்சாலையின் நிர்வாகி, சூப்பர்வைசர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சுற்றுச்சூழல் இலாகா பாசிர் கூடாங் கிளை அதிகாரிகள் இவ்விருவரையும் நேற்று கைது செய்தனர்.

பழுதடைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு சிஸ்டத்தில் இருந்து கசிந்த சாக்லெட் நிறத்திலான கழிவுநீர் தண்ணீரில் கலந்திருந்தது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று பாசிர் கூடாங் சுற்றுச்சூழல் இலாகா அதன் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

சேகரிக்கப்பட்ட கழிவுநீர் பரிசோதனைக்காக பெட்டாலிங் ஜெயா ரசாயன இலாகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாசிர் கூடாங் மாநகர் மன்றம், போலீஸ் ஆகிய தரப்புகள் இந்த சோதனையில் பங்கேற்றன.

தொழிற்சாலை பணிகளை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here