கற்றல்-கற்பித்தலை ஊக்குவிக்கும் 2023 அருங்காட்சியக புரிந்துணர்வு சுற்றுலா

(Our Reporter தி.மோகன்)

கோலாலம்பூர்,
ஆசிரியர்கள் ஆக்கப்பூர்வமான கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள் வதை ஊக்குவிக்கும் வகையில் 2023 அருங்காட்சியகம் புரிந்துணர்வு சுற்றுலா அண்மையில் நடத்தப்பட்டது.

மலேசிய அருங்காட்சியக இலாகாவுடன் இணைந்து கோலாலம்பூர் கூட்டரசுப் பிர தேச கல்வி இலாகா இந்த முன்னெடுப்பைச் செய்திருந்தது. இதில் கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர், நெகிரி ஙெ்ம்பிலான் ஆகிய நான்கு மாநிலத் தரப்பினர் பங்கேற்றனர்.


மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆக்கப்பூர்வமான கற்றல்-கற்பித்தல் சுழலை உருவாக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த முன்னெடுப்பில் 207 பள்ளிகளைச் சேர்ந்த 621 பேர் கலந்து கொண்டனர். அதில் ஓர் அணியில் ஓர் ஆசிரியர், இரு மாணவர்கள் என மூவருக்குமான குழு ரீதியிலான நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்தன.

அதில் ஆக்கப்பூர்வமான சமூகம் சார்ந்த உடை அணிந்து தாமான் தாசேக் பெர்டானா பூங்காவில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறுக்கோட்டப் போட்டியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து தேசிய அருங்காட்சியகம், மலாய் உலக சமூக அருங் காட்சியகம், பூர்வக்குடி மக்கள் கலை, கலாச்சார அருங்காட்சியகம், இசை அருங் காட்சியகம் என நான்கு மையங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் இந்த நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக இடம்பெற்றறிருந்தது.


இதுதவிர மாணவர்களின் கலைப்படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. பலதரப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் படைப்புகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சி யில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டார்.
குறிப்பாக ஆரம்பப் பள்ளி, இடைநிலைப்பள்ளி பிரிவுகளில் வெற்றி பெற்ற மூன்று தரப்பினருக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இதுதவிர சிறந்த சமூகப் படைப்பினை வழங்கும் வெற்றியாளர்களுக்கு அருங்காட்சி யகத் தரப்பு 10 பரிசுக்கூடைகளையும் ஏற்பாடு செய்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here