தஞ்சோங் மாலிம்:
வாசிப்பு, சிறுகதை எழுதும் ஆர்வம் நம் மாணவர்களிடையே குறைந்து வருவதைக் கண்டறிந்த UPSI ஆசிரியர் கல்லூரி மாணவர்கள் வாணிஶ்ரீ பெரியசாமி ,ஜோதி இளங்கோ, அன்பரசன் முனியாண்டி, திவ்யாஷினி முரசொலிமாறன் ஆகிய நால்வரும் தேசிய வகை மகிழம்பூ தமிழ்பள்ளியைத் தேர்வு செய்து கற்பனை வரைப்படம் (LAKARAN IMAGINASI) எனும் செயல்திட்டத்தை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேற்கொண்டனர்.
இந்நடவடிக்கை 02/12/2024 (திங்கட்கிழமை), 03/12/2024 (செவ்வாய்கிழமை) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. அந்த வகையில் ஆண்டு 5 CAMBRIDGE வகுப்பில் படிக்கும் 30 மாணவர்கள் இந்நடவடிகையில் சிறப்பாகப் பங்கேற்று அவர்களின் கற்பனை திறனை மேம்படுத்தி கொண்டனர்.
இந்நடவடிக்கையின் மூலம் மாணவர்களிடையே சிறுகதை எழுதும் ஆற்றலும் புது புது பயணக் கட்டுரை சிந்தனையையும் திறமையையும் மாணவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டனர்.
இந்த இரண்டு நாள் கற்பனை வரைப்படம் நடவடிக்கையில் 30 மாணவர்களும் மிக சிறப்பான முறையில் கலந்து கொண்டு, பயனடைந்து மகிழ்வைக் கண்டனர்.
அந்த வகையில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி கோகிலவாணி, பள்ளி நிர்வாகம், UPSI தமிழ்பிரிவு கல்லூரி பயிற்றுநர்கள் ஆகிய யோருக்கு மனம் கனிந்த நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று நான்கு பயிற்சி ஆசிரியர்களும் குறிப்பிட்டனர்.