செம்பூர்ணா:
இன்று அதிகாலை 4.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் இங்குள்ள இரண்டு நீர் கிராமங்களில் உள்ள சுமார் 30 வீடுகள் மற்றும் ஒரு மசூதிபள்ளிவாசல் என்பவன சேதமடைந்தன.
காலை 6.21 மணிக்கு சம்பவம் தொடர்பாக எங்களுக்கு அழைப்பு வந்தது என்றும், பலத்த காற்றினால் கம்போங் செலாமாட்டில் உள்ள சுமார் 20 வீடுகள், ஒரு மஸ்ஜிட் மற்றும் கம்போங் ஸ்ரீ அமானில் சுமார் 10 வீடுகள் சேதமடைந்தன என்று, செம்பூர்ணா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் மட்ஸ்லான் சர்மன் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் சுமார் 20 வாகனங்களும் சேதம் அடைந்தன என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.




















