பத்து பஹாட்:
ஜாலான் கம்போங் சுங்கை அயாமில் நேற்று மோட்டார் சைக்கிள் லோரி மீது மோதிய ஒரு விபத்தில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார், அதே நேரத்தில் அவரது தந்தை மற்றும் இரண்டு உடன்பிறப்புகள் காயம் அடைந்தனர்.
காலை 10.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அஃபிகா சயுரா கமாருல் ஆரிஃபின் என்ற அந்தச் சிறுமி , சம்பவ இடத்திலேயே பலியான உயிரிழந்ததாக மாவட்ட காவல்துறை தலைவர் உதவி ஆணையர் ஷாஹ்ருலானுார் முஷாதத் அப்துல்லா சானி தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், 37 வயதுடைய பாதிக்கப்பட்டவரின் தந்தை, தனது நான்கு, ஏழு மற்றும் எட்டு வயதுடைய மூன்று பிள்ளைகளுடன் செங்கராங்கில் இருந்து மின்யாக் பெகு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.
“சம்பவ இடத்தில், 44 வயதான உள்ளூர் நபர் ஓட்டிச் சென்ற லோரி ஒன்று மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாமல் சந்திப்பிலிருந்து வெளியேறியது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் லோரி டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் காயமடையவில்லை என்று கூறிய அவர், இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் கீழ் கவனக்குறைவாக அல்லது ஆபத்தான வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக விசாரிக்கப்படுகிறது.




















