ஒன்றாக இணையும் நிசான் – ஹோண்டா கார் நிறுவனங்கள்

பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான நிசான் மற்றும் ஹோண்டா ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மற்றும் ஹோண்டா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உலகின் 3 ஆவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாறவுள்ளது.நிசான் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கவுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நிறுவனம் ஆகஸ்ட் 2026 இல் டோக்கியோ பங்குச் சந்தையின் பிரைம் சந்தையில் பட்டியலிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

சீனாவில் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த 2 நிறுவனங்களின் இணைப்பும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here