தாமான் சுங்கை பீசி மறுசுழற்சி சேமிப்பு மையத்தில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு, மீட்பு இலாகா கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் மிகக் கடுமையாகப் போராடியது.
கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்பு இலாகா இரவு 9.00 மணியளவில் முதல் அவசர அழைப்பைப் பெற்றது. தொடர்ந்து பாண்டார் துன் ரசாக், செபூத்தே, சுங்கை பீசி, ஹங் துவா ஆகிய தீயணைப்பு, மீட்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று சீனியர் ஆப்பரேஷன் கமாண்டர் கமாருல்ஸமான் புசிருன் கூறினார்.
இரண்டு மணிநேர தொடர் போராட்டத்திற்குப் பின்னர் இரவு 10.20 மணிபளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சேமிப்பு மையம் முழுமையாக அழிந்தது. 72 அதிகாரிகள் தீபணைப்பு பணியில் ஈடுபட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.