ஜோகூர், தங்காக்கில் நடைபெற்ற ஒரு கார்னிவெலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பிரமாண்ட மாதிரி ராக்கெட்டில் சீனக் கொடி வைக்கப்பட்டிருந்தது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்பில் லெடாங் அம்னோ தொகுதியை சேர்ந்த இளைஞர் பிரிவினர் நேற்று முன்தினம் போலீஸில் புகார் செய்தனர் என்று கம்பீர் சட்டமன்ற உறுப்பினர் சாரிஹான் ஜானி கூறினார்.
இத்தகவல் தற்போது இப்பகுதியில் தீயாகப் பரவி வருகிறது. தங்காக் மாவட்ட மன்றத்தை தொடர்புக் கொண்டு தம்முடைய கவலையை தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.