கோலாலம்பூர்:
நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக சபா, சரவாக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் இன்று இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சபாவில் இரண்டு பகுதிகள் – சண்டக்கான் மற்றும் கினாபடங்கான் – சரவாக்கில் மூன்று பகுதிகள் -சுபிஸ், பெலூரு, மிரி, மருடி, பிந்துலு மற்றும் செபாஹ் – ஆகிய இடங்களில் இந்த மோசமான வானிலை நிலவும் என அது வெளியிட்டுள்ள ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
அதேநேரம் லாபுவானும் இதேபோன்ற வானிலையை அனுபவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபகற்ப மலேசியாவில், குறிப்பாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடினமான வானிலையை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரே மாநிலம் பினாங்கு என்றும் அது தெரிவித்துள்ளது.