காசாவிற்கான மனிதாபிமான உதவி; 1 மில்லியன் ரிங்கிட் வழங்கியது அம்னோ

BAGAN DATUK, 29 Mac -- Timbalan Perdana Menteri yang juga Menteri Kemajuan Desa dan Wilayah Datuk Seri Dr Ahmad Zahid Hamidi berucap ketika hadir ke Majlis Santunan Kasih Ramadan di Kompleks Umno Bagan Datuk hari ini--fotoBERNAMA (2024) HAK CIPTA TERPELIHARA


கோலாலம்பூர்:

காசா, பாலஸ்தீனத்திற்கான மலேசியாவின் 100-கன்டெய்னர் அவசர மனிதாபிமான உதவியை ஒழுங்கமைத்த இஸ்லாமிய அமைப்புகளுக்கான மலேசிய ஆலோசனைக் குழுவிற்கு அம்னோ RM1 மில்லியன் பங்களிப்பை வழங்கியுள்ளது.

பாலஸ்தீன மக்கள் புனித ரமலான் நோன்புக்காலம் மற்றும் வரவிருக்கும் நோன்புப்பெருநாள் ஆகியவற்றை கொண்டாட, இந்த நன்கொடை அவர்களுக்கு உதவும் என்று, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நேற்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

“தற்போது, பாலஸ்தீனத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகள் இஸ்ரேல் இராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதலால் அதிக துன்பங்களையும் சிரமங்களையும் அனுபவித்து வருவதை ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

“எனவே அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக தமது பங்களிப்பை வழங்கிய , குறிப்பாக அம்னோ உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here