ஜோகூர் பாரு:
ஃபெல்டா நிடார் 1, மெர்சிங் அருகே ஜாலான் மெர்சிங் நிடார் என்ற இடத்தில் டிரெய்லருடன் பல்நோக்கு வாகனம் (MPV) மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தங்களுக்கு பிற்பகல் 3.01 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே ஒரு இயந்திரம் மற்றும் 13 பணியாளர்கள் அடங்கிய குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது என்று மெர்சிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தளபதி, மூத்த தீயணைப்பு அதிகாரி II ஷம்சுரி ஷஃபாய் கூறினார்.
“பிற்பகல் 3.21 மணியளவில் அந்த இடத்திற்கு தமது குழுவினர் வந்தபோது, விபத்தில் டொயோட்டா கால்டினா MPV மற்றும் வால்வோ டிரெய்லர் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி டொயோட்டா காடினாவில் சிக்கிய டிரைவர் உட்பட பாதிக்கப்பட்ட எட்டு பேரையும் தமது குழு மீட்டது, ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.























