கோலாலம்பூர்:
நாட்டில் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையில் அதற்கான உரிமம் பெறுவதை இன்று முதல் அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 (சட்டம் 588) இன் கீழ் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பின்னர் இது இன்று முதல் செயற்படுத்தப்படுகிறது.
இந்த உரிமம் வழங்கும் முயற்சியானது இணையப் பாதுகாப்பை மேம்படுத்துதல், பயனர்களைப் பாதுகாத்தல் மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி தளங்களின் ஒழுங்குமுறை கண்காணித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC), ஜூலை 27, 2024 அன்று, மலேசியாவில் குறைந்தது எட்டு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் சேவைகள் நடத்துநர்கள் (CASP) 2025ஆம் ஆண்டு முதல் உரிமம் பெற வேண்டும் என்று கடந்தாண்டு ஜூலையில் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அதேநேரம் முறையாக உரிமம் பெறாவிடில் பிரிவு 588இன் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.